மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இதுவரை தாம் மீள்குடியேற்றப்படவில்லை என தெரிவித்து புத்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

0
236

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 27 வருடங்களாகியும் இதுவரை தாம் மீள்குடியேற்றப்படவில்லை என தெரிவித்து புத்தளத்தில் மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.

புத்தளம் தில்லையடி ரட்மல்யா பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனுவும் மீண்டும் தமது குடியேற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இயற்கை அழிவுகள் ஏற்படும் போது அவர்களுக்கான குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது போல எமக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து எமக்கான தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்தனர்.