பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள் – ரசிகர்கள் மத்தியில் கமல்

ரசிகர்களை சந்தித்து பேசி வரும் கமல்ஹாசன் பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள் என கூறியுள்ளார்.

0
205
வரும் 7ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். நேற்று தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், தனது நண்பர்கள், நற்பணி இயக்கத்தினர் விவசாயிகளுக்கு ஏரி, குளங்களை செப்பனிட உதவி செய்வார்கள் என கூறினார்.
இந்நிலையில் கேளம்பாக்கத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். தமிழக நலனுகளுக்காக ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். தமிழகத்துக்காக கையேந்துவதில் எனக்கு வெட்கம் இல்லை. பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள்.
இயற்கை சீற்றத்துக்கு ஏழை, பணக்காரர் என வித்தியாசம் தெரியாது. சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்து வருகிறோம். பேரழிவு வரும் வரை கத்திருக்க வேண்டுமா? வரும் முன் காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று ரசிகர்களுடனான சந்திப்பில் பேசி வருகிறார்.