கொழும்பில் பிரபல பாடசாலை மாணவன் திடீர் மணம்!

0
251

கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 4ஆம் தரத்தில் கல்விப் பயின்ற மாணவன் ஒருவன் திடீரென மயங்கி விழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. நவகம்புர-இரண்டாம் பிரிவு, வெல்லம்பிட்டிய பகுதியைச் ​சேர்ந்த எட்மன் எரைம் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் களுபோவில வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 13 மணித்தியாலங்கள் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்​னெடுத்து வருகின்றனர்.