யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது

0
154

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மற்றும் வவுனியாவில் மறைந்திருந்த ஆவா குழுவின் மூன்று உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கோண்டாவில், கொக்குவில் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு வாள்கள், மூன்று கைக்கோடாரிகள், ஒரு கைக்குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.

பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.