தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பியவர்கள் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்

0
137

தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தாயகம் திரும்பியுள்ள அகதிகளில் 21 வயதைப் பூர்த்தி செய்த, தமிழகத்தில் பிறந்தவர்களுக்கான இலங்கை குடியுரிமையைப் பெறுவதற்கு அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பொருளாளர் எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்தார்.

சுமார் 25,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழகத்திலுள்ள 107 முகாம்களில் சுமார் 63,000 இலங்கை அகதிகள் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.