பெற்றோல் தயாரிக்கும் திட்டத்தினால் அரசாங்கத்திற்கு 25 கோடி ரூபா நட்டம்

0
150

பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பெற்றோல் தயாரிக்கும் திட்டத்தினால் அரசாங்கத்திற்கு சுமார் 25 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்திற்காக அமைச்சு, திறைசேரியிலிருந்து 25 கோடி ரூபாவினை பெற்றுக்கொண்டிருந்தது.

எனினும், இந்த பணம் விரயமாக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கழிவுப் பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் ஒரு லீற்றருக்கான உற்பத்தி செலவு 350 ரூபாவினை விடவும் அதிகம் என்ற போதிலும் அதனை 40 ரூபாவிற்கே விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.