கரை ஒதுங்கிய இலங்கைப் படகு: உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை

0
184

இராமேஸ்வரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கிய இலங்கைப் படகை கைப்பற்றிய உளவுத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிகவும் அருகே இருப்பதால், இங்கிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம், கஞ்சா உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இதனைத் தடுக்க இப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் 6 அடி அகலமும், 18 அடி நீளமும் கொண்ட இலங்கை நாட்டின் பிளாஸ்டிக் படகொன்று நேற்று செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.

இதனைக் கண்ட மீனவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீஸார் படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 23 ஆம் தேதி இராமேஸ்வரம் வரவுள்ள நிலையில் இலங்கைப் படகு கரை ஒதுங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– Dina Mani