தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை! பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

0
707

2017ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. இதில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தனர்.

இதன் பெறுபேறுகள் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வெளியாகியிருந்தது. இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன

இதன் அடிப்டையில் 2018ஆம் ஆண்டு தரம் 6க்கு மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைக்கான வெட்டுபுள்ளிகள் பரீட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக தமிழ் மொழி பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி பின்வருமாறு,

தமிழ் கலவன் பாடசாலை

பாடசாலை முகவரி வெட்டுப்புள்ளி
ஹைலண்ட் கல்லூரி ஹட்டன் 171
பதுரியா மத்திய மகாவித்தியாலயம் மாவனெல்லை 169
காமல் பாத்திமா கல்லூரி கல்முனை 168
விவேகானந்தா கல்லூரி கொழும்பு 12 165
அல்முபறாக் மத்திய வித்தியாலயம் மல்வானை 164
கேம்பிறிஜ் கல்லூரி கொட்டகல 160
கெக்குனாகொல்ல தேசிய பாடசாலை கெக்குனாகொல்ல 160
சாகிறா முஸ்லிம் மகாவித்தியாலயம் மாவனெல்ல 159
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயம் வவுனியா 158
மூதூர் மத்திய கல்லூரி மூதூர் 158
ஹல்மின் ஹாச் தேசிய கல்லூரி ஹப்புகஸ்தலாவ 156
கொக்குவில் இந்துக்கல்லூரி கொக்குவில் 156
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முல்லைத்தீவு 156
விஸ்வமடு மகாவித்தியாலயம் விஸ்வமடு 155
ஸ்ரீராமகிருஸ்ணன் கல்லூரி அக்கரைப்பற்று 155
சாவகச்சேரி இந்துக்கல்லூரி சாவகச்சேரி 155
வாழைச்சேனை ஹன்னூர்மத்திய மகாவித்தியாலயம் வாழைச்சேனை 154
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி அட்டாளைச்சேனை 154
அலிகார் மத்திய கல்லூரி ஏறாவூர் 154

 

பெண்கள் பாடசாலை

பாடசாலை முகவரி வெட்டுப்புள்ளி
மகளீர் உயர்பாடசாலை கண்டி 183
விகாராம தேவி மத்திய வித்தியாலயம் கண்டி 176
முஸ்ஸிம் மகளீர் கல்லூரி கொழும்பு 04 174
சென்ஹெந்தனிஸ் புனித மகளீர் கல்லூரி கண்டி 170
ஸ்ரீ சன்முகா இந்து மகளீர் கல்லூரி வித்தியாலாயம் திருகோணமலை 169
மெதடிஸ் மகளீர் உயர்பாடசாலை பருத்திதுறை 165
வின்சன்ற் மகளிர் உயர் பாடசாலை மட்டக்களப்பு 165
சென் கேபிறியல் மகளில் கல்லூரி ஹற்றன் 161
வேம்படி மகளிர் உயர் பாடசாலை யாழ்ப்பாணம் 161
புனித சிசிலிஸ் மகளிர் கல்லூரி மட்டக்களப்பு 160
படிவுட்டின் மொகமுத் மகளிர் வித்தியாலயம் கண்டி 159
மொகமுத் மகளிர் கல்லூரி கல்முனை 159
இராமநாதன் இந்துக்கல்லூரி கொழும்பு 04 158
அமீனா மத்திய வித்தியாலயம் மாத்தளை 156

 

ஆண்கள் பாடசாலை

பாடசாலை முகவரி வெட்டுப்புள்ளி
றோயல் கல்லூரி கொழும்பு 07 182
புனித சில்வஸ்டஸ் கல்லூரி கண்டி 176
டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயம் கொழும்பு 07 173
இசிப்பத்தன கல்லூரி கொழும்பு 05 171
ஹாட்லி கல்லூரி பருத்திதுறை 170
சென்மைக்கல்ஸ் கல்லூரி மட்டக்களப்பு 164
சாஹிரா கல்லூரி சாந்தமருது 160
யாழ் இந்து கல்லூரி யாழ்ப்பாணம் 159
ஆர்.கே.எம்.ஸ்ரீகோணேஸ்வரா இந்து கல்லூரி திருகோணமலை 157
ஓட்டமாவடி மத்திய கல்லூரி ஓட்டமாவடி 156
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி யாழ்ப்பாணம் 155
காத்தான்குடி மத்திய கல்லூரி காத்தான்குடி 155
சிவானந்தா வித்தியாலயம் மட்டக்களப்பு 154