கண்டியில் 116 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் தேர்தலில் போட்டி!

0
189

கண்டி மாவட்டத்தில் சுமார் 116 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எச்.எம்.பி. ஹிடிசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

“கண்டி மாவட்டத்தில் 20 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மொத்தம் 116 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.

கட்டுப் பணம் செலுத்திய கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, பொது ஜன பெரமுண, ஜே.வி.பி என்பனவும் உள்ளடங்கியுள்ளன” என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் பத்து இலட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரத்து 342 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் நாமல் தலங்கம தெரிவித்துள்ளார்.