தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி – சி.வி.கே.சிவஞானம்

0
347

உள்ளூராட்சித் தேர்தலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து, ஜனநாயகப் போராளிகள் கட்சி போட்டியிடுவதாக, தமிழ் அரசுக் கட்சியின் இணைச்செயலரும், வடமாகாணசபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டணியின் மூன்று பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பகிரப்பட்ட ஆசனங்களில், தமிழ் அரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள், ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த வேந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்பட்டு விடக் கூடாது என்பதால் அதனைப் பலப்படுத்துவதற்காகவும், தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவும், தாம் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.