ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்கிறார் மஹிந்த

0
158

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பொறுப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொள்ள உள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட பொதுஜன முன்னணி கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

இந்த கூட்டமைப்பிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை ஏற்கத் தீர்மானித்துள்ளார்.

இதுவரை காலமும் பொதுஜன முன்னணியின் எந்தவொரு பதவி நிலையையும் மஹிந்த வகிக்கவில்லை என்பதுடன், அதிகாரபூர்வமாக இன்னமும் சுதந்திரக் கட்சியின் ஆலோசகர்களில் ஒருவராக கடமையாற்றி வருகின்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்தும், பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களின் ஐயப்பாட்டை நீக்கவும் மஹிந்த கட்சியின் தலைமைப் பொறுப்பினை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள உள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.