கேப்டன் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா பயணம்

0
149

மும்பை : தென்ஆப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட், ஒருநாள், டி-20 தொடரில் விளையாட விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றது.

தொடர் வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி-20) விளையாடி வெற்றி பெற்றது. மூன்று தொடர்களையும் கைப்பற்றி முத்திரை பதித்தது. இந்திய அணி அடுத்து தென்ஆப்பிரிக்காவில் விளையாடுகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று நள்ளிரவு தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறது.