இலங்கையில் அடுத்தடுத்து வந்திறங்கிய மூன்று நவீன கார்கள்!

0
121

அண்மையில் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கார் தொடர்பில் அனைவரது அவதானமும் செலுத்தப்பட்டிருந்தது.

உலகின் நவீன வாகனங்களே தற்போது இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது. நாட்டில் காணப்படும் தீர்வையற்ற வரியே அதிநவீன வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவர காரணமாகும்.

எப்படியிருப்பினும் ஓரிரு நாட்களில் நாட்டுக்குள் மூன்று அதிநவீன கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மூன்றாவது மோட்டார் வாகனம் கடந்த 29ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

தனியார் மோட்டார் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட இந்த மோட்டார் வாகனம் பெராரி 488 ரகத்தை சேர்ந்ததாகும்.

பெராரி ரக வாகனங்கள் உலகின் பணக்காரர்கள் மாத்திரமே பயன்படுத்துள்ளனர். கிம் கார்டஷியன் பரிஸ் ஹில்டன், ஜஸ்டின் பீபர், டேவிட் பெக்கம், ஆர்னோல்ட் ஸ்வாகனேகர், நிகலஸ் கேஜ் போன்ற கோடீஸ்வர நட்சத்திரங்களே இந்த மோட்டார் வாகனத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இலங்கையில் இதுவரையில் 3 பரிஸ் பெராரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றது.

என்ஜின் திறனுக்கமைய வரி அறிவிடப்படுவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் அதிக விலையுடனான வாகனங்களுக்கு வரி பணம் குறைவடைகின்றது.

இதன் காரணமாக இலங்கைக்கு மேலும் இவ்வாறான அதிக வாகனங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.