அணுகுண்டு வீசுவோம்: அமெரிக்காவை மிரட்டிய வடகொரிய அதிபர்

0
165

புத்தாண்டு தொலைக்காட்சி உரையில் அணுகுண்டு வீசுவோம் என அமெரிக்காவை வடகொரிய அதிபர் கிம் நேரடியாக மிரட்டியுள்ளார்.

புத்தாண்டையொட்டி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்தினார். உரையில், நாங்கள் அணு ஆயுத சோதனையில் தன்னிறைவு அடைந்து விட்டோம். எனது மேஜை மீது ஒரு பொத்தானை பொருத்தி இருக்கிறார்கள். அதை அழுத்தி உலகின் எந்த நாட்டை வேண்டுமானாலும் அணு குண்டு மூலம் என்னால் தாக்க முடியும். முக்கியமாக அமெரிக்காவை தாக்க முடியும் என்றார்.

மேலும் இந்த ஆண்டு வடகொரியாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் குறித்தும் பேசினார். இந்த ஒலிம்பிக் போட்டியின் மூலம் மக்களுக்கு எங்கள் பலத்தை காட்டுவோம். உலகிற்கு நாங்கள் யார் என்று இனி தெரியும் என்று கூறினார்.