சற்று முன்னர் மூடப்பட்டது வவுனியா பேருந்து நிலையம்!

0
189

வவுனியா பழைய பேருந்து நிலையம் சற்று முன்னர் மூடப்பட்டுள்ளதுடன், பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழைவாயில்களும் வவுனியா நகரசபை செயலாளரினால் பெரல்கள் கொண்டு மூடப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் வினவிய போது,

“வடமாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய வவுனியா நகரசபைக்குரிய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து மூடப்படவுள்ளதால் இன்றிலிருந்து பொது மக்கள் தமது பிரயாணங்களை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளுமாறு” தெரிவித்தார்.