பட்டாசு காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் தீ விபத்துக்கள்

0
163

பட்டாசு காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

தெஹிவளை பெல்லன்தொட்ட அத்திட்டிய வீதியில் இன்று அதிகாலை பொலித்தீன் களஞ்சியசாயைில் தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெஹிவளை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீயினால் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள இரண்டு வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவியமைக்கான காரணம இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், பட்டாசினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை தெஹிவளை வென்டர் பிளேஸில் 10 மாடி கட்டடமொன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.

தீயினால் 8 மாடிகளும் சேதமடைந்துள்ளதாக தெஹிவளை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தில் போடப்பட்டிருந்த அலங்காரங்கள் மீது பட்டாசு வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை மருதானையில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.

தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.