மத்தியவங்கி பிணைமுறி ஊழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்புபட்டுள்ளதற்கான காரணங்களும், ஆதாரங்களும் அதிகமாகவே உள்ளன. குற்றவாளிகளை காப்பாற்றவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என சந்தேகம் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக மக்களுக்கு அறிக்கை தொடர்பில் அறிந்துகொள்ள தாம் ஜனாதிபதி செயலாளரை நாளை  சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இதனைக் குறிப்பிட்டார்.