11 இளைஞர்கள் கடத்தல்: லெப்டினன்ட் கமான்டர் சந்தன ஹெட்டியாராச்சியைக் கைது செய்ய பிடியாணை

0
96

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் ப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு இன்று பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவினால் இன்று இந்த பிடியாணை மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோ டீ.கே.பி தசநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனை, அண்மித்த பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் வௌ்ளைவானில் கடத்தப்பட்டு காணமல்ஆக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின்பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் குறித்த கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.