8.3 C
New York
Tuesday, July 21, 2020
முகப்பு இலங்கை பிணைமுறி தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிக்கை

பிணைமுறி தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிக்கை

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்:

* குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதற்கு எந்தவிதத்திலும் நான் பின்வாங்கமாட்டேன்.

* பேர்பச்சுவல் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள ஆகக்குறைந்த இலாபம் 11145 மில்லியன் ரூபா.

* பிரதமர் அர்ஜுன மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

* அர்ஜுன மகேந்திரன் முறைகேடான, தவறான முறையில் தலையீடு.

* ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நடவடிக்கை தேவை.

* ஊழியர் சேமலாப நிதியம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிணைமுறி குறித்த முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து சன்றுமுன்னர் கருத்து வெளியிட்டார்.

முதலில், பிணைமுறி விசாரணையில் பங்கேற்ற குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அவ்வறிக்கையை நீதிபதி வசம் தாம் கையளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேற்படி அறிக்கையில் பிணைமுறி விவகாரத்தில், அர்ஜுன் அலோசியஸ் தலைமையிலான ‘பெர்ப்பெச்சுவர் ட்ரெஷரீஸ்’ 688 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொண்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவர் தனது அறிக்கையை மேலும் வாசிக்கையில்,

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்.

பிறந்திருக்கும் 2018 புத்தாண்டானது உங்கள் அனைவருக்கும் சுபீட்சமான வளமான புத்தாண்டாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன், வாழ்த்துகிறேன்.

இந்த நாட்டு மக்களின் முக்கிய கவனம் இன்று திரும்பியிருக்கும் அதேநேரம் கலந்தாலோசிக்கப்படும் அதேபோன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் ஒரு விடயமாக 2015/16 காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற புகார்களையும் பொதுமக்களின் கருத்தையும் கவனத்தில் கொண்டு என்னால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான முன்மொழிவுகள் ஆகியன உள்ளடங்கிய அறிக்கை 2017 டிசம்பர் 30 ஆம் திகதி மேற்குறிப்பிட்ட ஆணைக்குழுவினால் என்னிடம் கையளிக்கப்பட்டது.

2015 பெப்ரவரி முதல் 2016 மார்ச் 31 வரையிலான காலத்திற்கு உட்பட்ட பிணைமுறி வழங்கல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்ககான அதிகாரமே இவ் ஆணைக்குழுக்கு கிடைக்கப்பெற்றது.

அந்த ஆணைக்குழுவின் பொறுப்புக்களாக

(i) சம்மந்தப்பட்ட விபரங்களை ஆராய்ந்து பார்த்தல்

(ii) திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தீர்மானங்களுக்கு வருவதும் அந்த தீர்மானங்கள் தொடர்பில் முன்மொழிவுகளை முன்வைப்பதுமே ஆகும்.

ஆணைக்குவின் ஆணையாளர்களாக செயற்பட்ட உயர்நீதிமன்ற நீதிவான்களுக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளராக கடமையாற்றிய அரச கணக்காய்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் அவர்களுக்கும் ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கும் சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், பொலிஸ் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு மற்றும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற தகவல்களுக்கு ஒப்பான நிலைமை 2008 ஆண்டிலிருந்து இடம்பெற்று வந்திருப்பதாக ஆணைக்குழு கருதுகின்றது. அவ்விடையங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு அதாவது 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதனை இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் அதற்கமைய கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்றும் ஆணைக்குழு அறிவுறுத்துகிறது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் (நEPF) நிதியே அக்காலத்தில் அதிகளவில் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

2015/2016 காலப்பகுதிக்கான ஆணைக்குழுவின் அறிக்கை இடைக்கால அறிக்கை அல்லாது 1257 பக்கங்களைக் கொண்ட முழுமையான அறிக்கையாகும். இப்பணியினை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு 10 மாத காலத்தை செலவிட வேண்டியிருந்தது.

இந்த அறிக்கையினை ஏற்கனவே நான் சட்டமா அதிபரிடம் கையளித்திருக்கிறேன். எதிர்வரும் காலங்களில் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய குற்றலியல் மற்றும் சிவில் வழக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினாலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினாலும் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிடுகின்றது.

மத்திய வங்கியின் கட்டமைப்பு, அரச கடன் திணைக்களம், நேரடி பிணைமுறி வழங்கல்ரூபவ் பிணைமுறி இறைமை மற்றும் பிணைமுறியை ஏலத்தில் விடுதல் ஆகியவற்றின் சாதக பாதக நிலமைகளை தெளிவுபடுத்தி இருக்கின்றது.

அர்ஜுன் மகேந்திரன் அவர்களினதும் வங்கி உத்தியோகத்தினர்களினதும் வெளியிலிருந்து செயற்பட்ட நபர்களினதும் நிறுவனங்களினதும் பங்கேற்புடனும் பேர்பச்சுவல் ரெஸறிஸ் நிறுவனம் சட்டத்திற்கு முரணான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளது என்பதை இந்த அறிக்கை கூறுகின்றது.

2015 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் மூலம் பேர்பச்சுவல் நிறுவனம் ஆகக்குறைந்து 688 மில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது. இத்தொகையானது இந்த விசாரணைக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஈட்டிய இலாபமாக இருப்பதால் இதைவிட கூடுதலான இலாபத்தை இந்நிறுவனம் ஈட்டியிருக்க கூடுமென ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

விசாரணைகளிலிலிருந்து வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டாம் நிலைச் சந்தையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பேர்பச்சுவல் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள ஆகக்குறைந்த இலாபம் 11145 மில்லியன் ரூபாவாகும். இதனால் ஊழியர் சேமலாம நிதி உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டம் 8529 மில்லியன் ரூபா ஆகும். அதாவது 8.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் முடிவுகள் தொடர்பில் மத்திய வங்கியின் உயரதிகாரிகள் செயலிழந்த நிலையில் இருந்ததாகவும் அவர்கள் எந்தவித கேள்விகளையும் எழுப்பாது செயலிழந்த நிலையில் இருந்ததால் தவறான முடிவுகளை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகியிருக்கலாமென ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. அத்தோடு அர்ஜுன் மகேந்திரன் அவர்கள் முறைகேடான முறையிலும் தவறான முறையிலும் தீர்மானங்களை மேற்கொண்டு பிணைமுறை ஏலம் தொடர்பான செயற்பாடுகளில் சம்மந்தப்பட்டிருப்பதுடன் உள்ளக தகவல்களை வெளித்தரப்பினருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு இலாபமீட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது.

அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிப்பது தொடர்பான கௌரவ பிரதமர் அவர்களின் அதிகாரங்கள் முறையானது என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதமர், அர்ஜுன் மகேந்திரன் மற்றும் சமரசிறி ஆகியோர் பற்றியும் அதிலும் குறிப்பாக அர்ஜுன் மகேந்திரன் அவர்கள் கொடுத்த வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டிருப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் என்றும் எனினும் பிரதமர் அவர்கள் அப்படி நடந்திருக்கக் கூடாது எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இந்த விடயங்கள் கோப் விசாரணைக்குழுவின் முன்னிலையிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் பிரதமர் அவர்களால் அர்ஜுன் மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

அலோசியஸ் குடும்பத்தினருக்கு சொந்தமானரூபவ் அவர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த வோல்ட் அன் றோ நிறுவனத்தினால் பென்ட் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பென்ட் ஹவுஸ் மாடி வீட்டுக்கு மாதாந்த வாடகை செலுத்தியிருப்பதையிட்டு பொறுப்பேற்க வேண்டியவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களே என்பதும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும் ஆணைக்குழுவின் முன்னால் பொய் சாட்சியம் அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும் இவ்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி முறைகேடான விதத்தில் உபயோகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கின்றது. அதன் உண்மையான தொகையை அறிவதற்கு சட்டரீதியான ஆய்வு (தடவியல் தணிக்கை பரிசோதனை Forensic Audit Examination) மேற்கொள்ளப்பட வேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் செயற்பாடுகள் காரணமாகவே ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி தவறான முறையில் உபயோகப்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருப்பதாக கூறும் இவ்வறிக்கைரூபவ் சம்பந்தப்பட்ட தரப்பினரை இனங்கண்டிருப்பதுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக பேர்பச்சுவல் நிறுவனத்தின் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிஹேன மற்றும் அறிக்கையில் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இனங்காணப் பட்டிருப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் அரசுக்கு ஏற்பட்ட நட்டத்தினை ஈடுசெய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென்றும் இவ்வறிக்கை பரிந்துரைக்கின்றது. அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்

இலங்கை மத்திய வங்கியில் எதிர்காலத்தில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கும் ஆணைக்குழுவின் தற்கால பரிந்துரைகளை செயற்படுத்தக்கூடிய வகையிலும் பழைய சட்டமூலத்தை இரத்துச் செய்து புதிய நாணயச் சட்ட சட்டமூலத்தை (Monetary Law Act) அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட பங்குப் பத்திரங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். நாணய சபை உறுப்பினர்களையும் மத்திய வங்கி ஆளுநரை நியமிப்பதற்கு சட்டசபையின் ஒப்புதலைப் பெற்றுகொள்ள வேண்டும்ரூபவ் அதற்கேற்றவகையில் சட்ட திட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரச கடன் திணைக்களத்தின் செயற்பாடுகளை கடும் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும். மத்திய வங்கியின் கணக்காய்வு செயற்பாடுகள் உரிய முறையில் நடைபெறாது இருப்பதால் அதன் கணக்காய்வு பிரிவினை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்.

மத்திய வங்கிக்கென பிரத்தியேக சட்ட பிரிவினை ஸ்தாபித்து அதனை வினைத்திறன் மிக்கதாக ஆக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2008 முதல் 2015 வரையில் இடம்பெற்ற பிணைமுறி வழங்கல் தொடர்பில் ஆராய்வதற்கான உரிமை இவ்வாணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறாமையினால் அதைப்பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்படுகின்றது.

பான் ஏசியா வங்கியுடனான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அதன் முன்னாள் தலைவரின் செயற்பாடு ஆகியன ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகளை முறையான ஆய்வுக்கு உட்படுத்துவதுடன் இந்நிதியத்தின் செயற்பாடுகளை சரியான வழிக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும் என்பதுடன் ஊழியர் சேமலாப நிதியத்தை மீள்கட்டமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஒழுக்கவியல் கோவையை அறிமுகப்படுத்த வேண்டியதுடன் கீழ்நிலை பிணைமுறை கொள்வனவாளர்களுக்கான ஒழுக்கவியல் கோவையை செப்பனிட வேண்டும்.

சட்டமா அதிபர் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியன இவ்வறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக குறிப்பிட்ட பணத்தை மீளப் பெறுதல் வழமையான சட்டத்தின்கீழே செயற்படுத்தப்படுகின்றது. ஆயினும் அதிக காலம் எடுப்பதால் அதற்கு மாற்று வழியாக இந்த பணத்தினை மீளப்பபெறுவதற்கு பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்று நிறைவேற்ற வேண்டும். அதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தினைப் பெற்று துரிதமாக பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமென இவ்வாணைக்குழு பரிந்துரைக்கிறது.

நாம் இதனுடன் உடன்படுகிறோம்.

ஆணைக்குழுவை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து செலவீனங்களையும் பேர்பச்சுவல் நிறுவனத்திடமிருந்து அறவிடப்படவேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது.

ஏற்கனவே நான் இவ்வறிக்கையின் ஒரு பிரதியினை சட்டமா அதிபரிடம் கையளித்திருக்கின்றேன். சட்டரீதியாக செயற்பட வேண்டியவர்களை இனம்கண்டு இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குற்றவியல் அல்லது சிவில் சட்ட நடைமுறையின்கீழ் அவர் முன்னெடுப்பார்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய வழக்கு தொடுப்பதற்கு இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தில் ஏற்படுத்த வேண்டிய ஒரு சிறிய மாற்றத்தைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதுதொடர்பில் ஏற்கவே சட்டமூலங்களை தயாரித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். அவற்றை துரிதமாக மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவை பலப்படுத்தி அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை நீண்டகாலத்திற்கு முன்பே எடுக்கவேண்டியிருந்த போதிலும் தற்போதே அதற்கான நடவடிக்கைகள் எம்மால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கியின் இரகசியத்தன்மை செயற்பாட்டு முறைமை, கணக்காய்வு முறைமை ஆகியன மிகவும் பலவீனமாக இருந்து வந்திருக்கின்றது. தொலைபேசி உரையாடல் பதிவுமுறை, கண்காணிப்பு கமரா முறைமை ஆகியன எதுவுமே மத்திய வங்கியினுள் இருந்திருக்கவில்லை. அக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த ஆணைக்குழு விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட மத்திய வங்கியின் ஊழியர்கள் சிலருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கும் பரிந்துரைகளுக்கும் அமைய இலங்கை மத்திய வங்கியினுள் ஏற்படுத்த வேண்டியிருக்கின்ற மாற்றங்கள்பற்றி எதிர்வரும் தினங்களில் மத்திய வங்கி ஆளுநர் விசேட அறிக்கையை வெளியிடுவாரென நான் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறான முறைகேடுகள் ஊழல்கள் ஆகியன எதிர்காலத்தில் மத்திய வங்கியினுள் இடம்பெறும்வதை தவிர்ப்பதற்கு ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள மூன்று சட்டவாக்கங்களை விரைவாக தயாரித்து அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரையும் நீதியமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தல் மற்றும் ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளயும் தாமதமின்றி விரைவாக செயற்படுத்துவதற்கு குறிப்பிட்ட துறைகளின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் முன்னேற்றம்பற்றி மாதாந்தம் கூடி ஆராய்ந்துபார்க்கும் பொறுப்பை எனது செயலாளரிடம் ஒப்படைத்திருக்கிறேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

அரசுக்கு ஏற்பட்டிருக்கின்ற நட்டமான 11145 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மீள் அறிவீடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதற்கும் எந்தவிதத்திலும் நான் பின்வாங்கமாட்டேன் என்றும் இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டும்.

அரசுக்கு ஏற்பட்ட நட்டத்தின் மொத்த தொகையான 11145 மில்லியன் ரூபாவில் ஊழியர் சேமலாப நிதி,மஹாபொல புலமைப்பரிசில் நிதி, தேசிய சேமிப்பு வங்கியின் நிதி இலங்கை காப்புறுதி நிறுவன, காப்புறுதி கூட்டுத்தாபன நிதியம், ஆகியவற்றின் தொகை 8529 மில்லியன் ரூபாவாகும். அதாவது 8.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் நிதி என்றும் எஞ்சிய தொகை தனியார் துறையினருக்கு சொந்தமானது என்றும் ஆணைக்குழு அறியத் தந்திருக்கின்றது.

பேர்பச்சுவர் நிறுவனம் பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த பெருந்தொகை வருமானமான 11145 மில்லியன் ரூபாவை ஐந்து மாதங்களுக்குள்ளேயே ஈட்டியிருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக இங்கு குறிப்பிட வேண்டியது  யாததெனில் இவ்வறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மக்களுக்கு வெளிப்படையான அறிக்கையாக முன்வைப்பதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உரிய முறையில் துரிதமாக முன்னெடுப்பதற்கும் சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கையில் அந்த வழக்குகளுக்கு பாதகத்தன்மையினை ஏற்படுத்தாத வகையில் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் தகவல்களின் வெளிப்படைத்தன்மை பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு இந்த ஆணைக்குழுவுடன் தொடர்புபடாத என்னால் இதற்கு முன் நியமிக்கப்பட்ட இன்னுமொரு ஆணைக்குழுவின் அறிக்கையும் என்னிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அரசவள துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவே அதுவாகும்.

இந்த ஆணைக்குழு கடந்த இரண்டரை வருடங்களாக பணியாற்றியிருக்கன்றது. இந்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாக இருந்த மேல்நீதிமன்ற நீதிவான்கள் உள்ளிட்ட செயலாளர், பணிக்குழாமின் அங்கத்தவர்கள், அந்த நடவடிக்கையின்போது ஒத்துழைப்பு வழங்கிய நிறுவனங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆணைக்குழுவின் 34 விசாரணை அறிக்கைகள் என்னிடம் கையளிக்கப் பட்டிருக்கின்றன. அதில் 17 அறிக்கைகள் ஏற்கனவே என்னிடம் கையளிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றை சட்டமா அதிபரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக கையளித்திருக்கின்றேன். அவை மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே வழக்குகளை தொடுத்திருக்கின்றது. அதேபோல் இரண்டு தினங்களுக்கு முன் என்னிடம் கையளிக்கப்பட்ட எஞ்சிய 17 அறிக்கைகளையும் இந்த வாரத்துக்குள் நான் சட்டமா அதிபரிடம் கையளிப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன். அவைபற்றிய விசாரணைகளும் முன்னெடுக்கப்படும்.

பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அரச வள துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்வைத்த அறிக்கை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அரசவள துஸ்பிரயோகம் பற்றிய விசாரணை நடத்துவதற்கான ஆற்றலையும் அறிவையும் அனுபவங்களையும் கொண்ட உத்தியோகத்தர்களின் பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தக்க தகுதி வாய்ந்தவர்களை அந்தந்த நிறுவனங்களுக்கு நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டில் அந்தப் பயிற்சிபெற்ற தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதனால் அந்த உத்தியயோகத்தர்களுக்கு பயிற்சிகளை பெற்றுக் கொடுத்து அதற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டியிருக்கின்றது.

திணைக்களங்கள், அதிகாரசபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களின் போது அதற்கான தகுதி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவ்வாறான உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் உரிய தகமைகளை பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதை திட்டவட்டமாக இவ்வாணைக்குழு எடுத்துரைத்திருக்கின்றது.

பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அரசவள துஸ்பிரயோகம் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினை கொண்டு நடத்துவதற்காக அரசாங்கம் இதுவரை மேற்கொண்;ட செலவீனத்தைவிட அதிகமான இலாபத்தை அரசுக்கு பெற்றுக் கொடுத்திருப்பதாக இவ்வாணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இலஞ்சம் தொடர்பான வழக்குகளை கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் முறையீடு செய்வதன் மூலம் உரிய பலன் கிடைக்கவில்லை, சாட்சியாளர்கள் தூரப்பிரதேசங்களிலிருந்து வரவேண்டியிருப்பதே அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இதனால் இக்குறையினை நிவர்த்திசெய்து கொள்வதற்கு குறைந்தபட்சம் மாகாண ரீதியில் இவ்வாறான நீதிமன்றங்களை செயற்படுத்த வேண்டுமென இந்த ஆணைக்குழு பரிந்துரைத்திருக்கின்றது.

இந்த இரண்டு ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகளைப் பற்றிய எனது அறிவித்தலை நிறைவு செய்து கொள்வதற்கு முன் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த ஆணைக்குழுக்களை நியமிப்பது தொடர்பிலும் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்ததுடன் இதன் செயற்பாடுகளைப்பற்றி அறிந்துகொள்வதற்கான ஆவலை இச்சமூகம் வெளிப்படுத்தி இருந்தது. இந்த ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு முன்பாக குறிப்பாக இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் போது இந்த ஆணைக்குழுவுக்கும் இதற்கு முன் இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் நேர்ந்த கதியே நேருமென சிலர் கூறினார்கள். அத்தோடு காலத்தை கடத்துவதற்காகவே இவ்வாறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுவதாகவும் இன்னும்சிலர் கருத்துத் தெரிவித்தார்கள்.

இவ்வாறான கருத்துக்கள் பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டன. இருப்பினும் இந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளைப்பற்றி நாம் மனமகிழ்ச்சி அடையவேண்டும். அதனால் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அனைத்து அங்கத்தவர்களுக்கும் அதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அத்தோடு இந்த ஆணைக்குழுக்களை நியமித்ததைப் பற்றி சில தரப்பினர்கள் வெளியிட்ட விமர்சனங்களைப் பற்றியும் நான் குறிப்பிட வேண்டும். இந்த ஆணைக்குழுக்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் குறிவைத்து முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் இந்த இரண்டு ஆணைக்குழுக்களினதும் அறிக்கைகளின் அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும போதும் சட்ட நடவடிக்கைகளின் போதும் வழக்கு தொடுக்கப்படும் போதும் இரண்டு பிரதான கட்சிகளினதும் உறுப்பினர்கள் இவற்றிற்கு முகம்கொடுக்க வேண்டிய குற்றம் சுமத்தப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அதனால் எந்தவொரு கட்சியையும் இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை, முன்னெடுக்கப்படாது என்பதனை தெரிவித்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு அனைத்து ஒத்துழைப்புக்களும் பெற்றுக்கொடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Recent Comments