மைதானத்தில் கடுமையாக மோதிக்கொண்ட மகிந்தவின் புதல்வர்கள்? அணியின் முகாமையாளர் கூறிய தகவல்

0
136

அண்மையில் நடைபெற்ற ரகர் போட்டியின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் கடுமையாக மோதிக் கொண்ட காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவத்தின் போது நாமல் மற்றும் யோசித்த ஆகியோர் தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை என C.H அன்ட் F.C அணியின் முகாமையாளர் தம்மிக மெதகெதர தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், “குறித்தப் போட்டியில் வீரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் மாத்திரம் இடம்பெற்றதாக” கூறியுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்தின் போது நாமல் மற்றும் யோசித ஆகிய இருவரும் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இணையத்தில் வெளியான அனைத்தும் பொய் எனவும் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற லீக் ரக்பி தொடரில் கடற்படை மற்றும் C.H அன்ட் F.C அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியின் போது மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று தற்போது வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் யோஷித மற்றும் அணியின் உதவியாளராக செயற்பட்ட நாமல் ஆகியோர் தொடர்புப்பட்டிருந்தமையை காண முடிந்தது.

இந்நிலையிலேயே, ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள C.H அன்ட் F.C அணியின் முகாமையாளர் தம்மிக மெதகெதர “நாமல் மற்றும் யோசித” ஆகியோர் தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை என கூறியுள்ளார்