ராஜபக்ச குடும்பத்தினரின் கணக்குகளை ஆராய அமெரிக்கா, இந்தியா உதவி

0
116
மகிந்த ராசபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு டுபாயில் உள்ள வங்கிக் கணக்கு விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்துத் தெரிவித்துள்ள அமைச்சரவை உப பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, டுபாய் வங்கிகளில் ராஜபக்ச குடும்பத்தினர் சட்ட விரோதமாக வைத்திருக்கும் கணக்குகள் குறித்து விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் வெகுவிரைவில் மிக முக்கியமான தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

டுபாய் வங்கிகளில் ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் பெயரில் பல மில்லியன் டொலர்கள் வைப்பிலிருப்பதாக 2015ஆம் ஆண்டு அரசு தெரிவித்திருந்தது. இந்தக் கணக்குகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் உதவியளித்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி என்ற பெயரில் பெற்ற பணத்தையெல்லாம் வெளிநாடுகளில் தமது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சட்ட விரோதமாக ராஜபக்ச குடும்பம் முடக்கியிருக்கிறது என்று தற்போதைய அரசு கூறியிருந்தாலும் ராஜபக்ச அதை மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.