வங்கிகளற்ற நிதி நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானத்திற்கு வந்துள்ள மத்திய வங்கி

0
138

வங்கிகளற்ற நிதி நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தீர்மானங்கள் தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத்திய வங்கியின் ஆளுநரால் தௌிவூட்டப்பட்டது.

2018 ஆம் ஆண்டு சேமிப்பிற்கான நிதி மற்றும் நிதி கொள்கைகள் தொடர்பான கொள்கை பிரகடனம் இன்று வௌியிடப்பட்டது.

அதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களின் மூலதன மட்டத்தை மேலும் சக்திமயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆரம்பகட்ட மூலதனமாக ஒரு பில்லியன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு 1.5 பில்லியனாகவும், 2020 ஆம் ஆண்டு 2 பில்லியன் வரையிலும் இந்த மூலதனம் அதிகரிக்கப்படவுள்ளது.

சந்தைகளில் முன்னெடுக்கப்படும் கையகப்படுத்தல் மற்றும் ஒன்றிணைந்த அனுமதிப்பத்திரங்களை கொண்டு இயங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களை மேலும் சக்திமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே மத்திய வங்கியின் கருத்தாக அமைந்துள்ளது.