எழிலன் உள்ளிட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது?

0
123

இறுதிக் கட்டப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த எழிலன் உள்ளிட்ட க்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரிப்பதற்காக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே இடம்பெற்ற போரின் முடிவில் எழிலன் உள்ளிட்ட போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

இந்நிலையில், இறுதிப் போரின்போது சரணடைந்தவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே குறித்த வழக்கு எதிர்வரும் பங்குனி மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைகளில் 5 பேரினுடைய வழக்கின் அறிக்கைகள் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏனைய ஆறு பேருடைய வழக்குகளும் இன்றைய நாள்(04.01.18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமையை அடுத்தே, இந்த வழக்குகளை எதிர்வரும் பங்குனி மாதம் 19 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.