கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

0
88

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது அநீதிகள் இடம்பெற்றால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கல்வி அமைச்சு அல்லது மாகாண கல்வி அமைச்சில் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை தரம் ஒன்றில் இணைத்துக்கொள்ளும் போது அநீதிகள் இடம்பெறுமாயின் அது குறித்து முதற்கட்டமாக அந்த பாடசாலையில் மேன்முறையீடு செய்ய முடியும்.

இந்த சந்தரப்பத்தில் திருப்திகரமான பதில்கள் கிடைக்காதவிடத்து கல்வி அமைச்சு அல்லது மாகாண கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்ய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க விசேட பிரிவின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த ஆண்டுக்கான தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.