விடுதலைப் புலிகளோடு இணைந்து புத்தாண்டு வாழ்த்து கூறிய இளைஞருக்கு நேர்ந்த கதி!

0
125

2018ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு பேஸ்புக் ஊடாக புத்தாண்டு வாழ்த்துக் கூறிய இரத்தினபுரி, எலபான மில்லவிட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையை பயன்படுத்தி பேஸ்புக் ஊடாக வாழ்த்து கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து தமக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த இளைஞர் விடுதலைப் புலிகள் அமைப்பின் இலச்சினையை பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.