பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்தும் 6 மாத கால தடை

0
140

பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் கொள்வனவு வியாபார பணிகளுக்கு மேலும் ஆறு மாதக்காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறித்த தடை இன்று முதல் அமுலுக்கு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்றுமுன்தினம் கூடி சில முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்டிருந்தது.

அதனடிப்படையில் சொத்து மற்றும் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தை 5ஆம் திகதியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு மீண்டும் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிணைமுறி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய முதனிலை நிறுவனமாகக் கருதப்படும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தை அதன் அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கைககளிலிருந்தும் மத்திய வங்கி தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.