1.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஓட்கா பாட்டில் கொள்ளை January 5, 2018

0
120

டென்மார்க் நகரத்தில் இருந்த உலகிலேயே விலை மதிப்புள்ள ஓட்கா பாட்டில் கொள்ளை போயியுள்ளது.

டென்மார்க் நகரில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான தனிஷ் பாரில் இருந்த உலகிலேயே அதிக விலையுர்ந்த ஓட்கா பாட்டிலை திருடன் ஒருவன் கொள்ளை அடித்து சென்றுள்ளான். மது பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த ஓட்கா பாட்டிலில் வெளிப்புறம் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டது. மேலும், பாட்டிலில் கழுகு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள மூடியில் விலையுர்ந்த வைர கற்கள் பொதிக்கப்பட்டுள்ளன.

வைரம், தங்கம், வெள்ளி,ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ள இந்த ஓட்கா பாட்டிலின் விலை சுமார் 8 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தினமும் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்படும் இந்த ஓட்கா பாட்டிலை கடைசியாக  பார் மூடும் வேளையில் பாரின் உரிமையாளர் அறையில்  பூட்டி வைத்துள்ளார். இந்நிலையில் நடு இரவில், ஓட்கா பாட்டில் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த திருடன் ஒருவன், அறையை திறந்து விலையுர்ந்த ஓட்கா பாட்டிலை திருடி சென்றுள்ளான். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளன. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டென்மார்க் காவல்துறையினர், திருடனை பிடிப்பதற்கான தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். 8 கோடி மதிப்புள்ள இந்த ஓட்கா பாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் 3 சீசனில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.