அரச நிறுவன சொத்துக்களோ, வாகனங்களோ தேர்தல் விடயங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது

0
170
மைத்திரிபால சிறிசேன

தேர்தல் தொடர்பில் அரச நிறுவனங்களினூடாக முன்னெடுக்கப்படும் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (05) மாலை நடைபெற்ற அமைச்சுக்களின் செயலாளர்களூடனான கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

எந்தவொரு அரச நிறுவனங்களின் சொத்துக்களோ அல்லது வாகனங்களோ தேர்தல் தொடர்பான விடயங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவொன்று செயற்படுவதால், சட்டங்கள் கடுமையாகவுள்ளதாகவும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.