லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை

0
148

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 5 இலட்சம் (இந்திய) ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால்சிங் பிறப்பித்துள்ளார்.

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கு மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனையும் 5 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பீகாரில் முதல்வராக இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 1990 முதல் 1994 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மாட்டுத் தீவனம் வாங்கியதாகக் கூறி 89.27 இலட்சத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.