விமல் வீரவங்சவின் குற்றங்களை விசாரிக்க தனி ஆணைக்குழு வேண்டும்

0
156

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச செய்த ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தனியான ஆணைக்குழுவை நியமிக்குமாறு அமைச்சர் பீ.ஹரிசன், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

விமல் வீரவங்சவிடம் இரண்டு தேசிய அடையாள அட்டைகள் இருக்கின்றன. இதனால், அவர் இரண்டு முறை தேர்தலில் வாக்களிக்கக் கூடும் என்ற சந்தேகம் உள்ளது. மேலும் வீரவங்சவின் குடியுரிமை தொடர்பாகவும் சந்தேகம் இருக்கின்றது.

அதேவேளை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உண்மையான ஆதரவுடன் தற்போதைய ஜனாதிபதியுடன் இருக்கவில்லை.

அவரது உடல் மைத்திரியிடம் இருந்தாலும் மனம் எங்கிருக்கின்றது என்பதை நம்ப முடியாது எனவும் அமைச்சர் பீ. ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.