இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் கொள்வனவு செய்துள்ள அதிநவீன கார்

0
152

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அதிநவீன கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

BMW i 8 என்ற அதிநவீன சொகுசு கார் ஒன்றை லசித் மாலிங்க கொள்வனவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் மிகவும் சொற்ப அளவிலானோர் பயன்படுத்தும் அதிநவீன காரினை லசித் மாலிங்க கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த காரின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாவுக்கும் மேற்பட்டதென கணிக்கப்பட்டுள்ளது.

மாலிங்க கொள்வனவு செய்த காருடன் எடுத்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்க தவறிய லசித் மாலிங்க, அதிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.