உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறேன்! இன்றே வீட்டுக்கு செல்ல தயார்

0
153
மைத்திரிபால சிறிசேன

எனது பதவி காலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மரியாதையுடன் ஏற்கிறேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் இதனை இன்றைய தினம் தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘நாளை அல்ல, இன்றுகூட வீட்டுக்கு செல்லத் தயார். ஜனநாயகம் என்பது அதுதான்’ என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமது பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி கோரிய விளக்கத்துக்கமைய, பிரதம நீதியர் ப்ரியசாத் டெப் தலைமையில், உயர்நீதிமன்றம் நேற்று விசேடமாக கூடி ஆராய்ந்தது.

இதன்போது ,ஜனாதிபதி எதிர்வரும் 2021ஆம் ஆண்டுவரை ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.