கருத்தரிக்க முடியாதவர்களுக்காக அரசாங்கத்தின் விசேட திட்டம்

0
87

கருத்தரிக்க முடியாதவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பூரணத்துவமிக்க சிகிச்சை நிலையமொன்றை அரசாங்கம் தாபிக்கவுள்ளது.

அந்த வகையில் இந்த விசேட திட்டம் தொடர்பான யோசனை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட நிலையில் இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பூரணத்துவமிக்க சிகிச்சை நிலையம் ஒன்றை முதலில் காசல் வீதி மகளீர் வைத்தியசாலையில் தாபிப்பதற்கும், அதன் இரண்டாம் தொகுதியினை காலி, கராப்பிட்டிய நவீன மகப்பேற்று வைத்தியசாலையில் தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மூன்றாம் கட்டத்தின் கீழ் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் அவ்வாறான சிகிச்சை நிலையங்கள் ஒன்று வீதம் தாபிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.