தனியார் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை கட்டணங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

0
129

தனியார் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்கு அறவிடப்படும் கட்டணங்களை மட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஒரே வகையான சத்திரசிகிச்சைகளுக்கு, ஒவ்வொரு தனியார் வைத்தியசாலைகளிலும் வெவ்வேறான கட்டணங்கள் அறவிடப்படுவதாக தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் சத்திரசிகிச்சைகளுக்கான அதிக பட்ச கட்டணத்தை சுகாதார அமைச்சு வௌியிடவுள்ளது.

தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளுக்கு அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அது குறித்து அறிக்கை கிடைத்தவுடன் அதிக பட்ச கட்டணம் குறித்து அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.