8.3 C
New York
Wednesday, July 22, 2020
முகப்பு இலங்கை இந்தியாவுடன் கூட்டணி வைத்து விடுதலைப்புலிகளை அழித்தோம்: கோட்டாபய

இந்தியாவுடன் கூட்டணி வைத்து விடுதலைப்புலிகளை அழித்தோம்: கோட்டாபய

எத்தனையோ தலைவர்கள் முயற்சி செய்தும் முடிவுக்கு கொண்டுவரமுடியாத விடுதலைப்புலிகள் இயக்கத்தை 3 வருட சிறுகாலப்பகுதிக்குள் நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நேரடிக் காணொளியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

30 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் காணப்பட்ட யுத்தத்தை நாம் நிறைவுக்கு கொண்டுவந்தோம். அதற்கு காரணம் புலிகளுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எடுத்ததோடு சரியான தலைவர்களையும் உருவாக்கியமையே ஆகும்.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததது மாத்திரமல்லாமல் அதன்பின்னர் நாட்டை அபிவிருத்திப்பாதையில் கொண்டு சென்றோம் என்பதை குறிப்பிட்டு கூறியாக வேண்டும்.

அதேபோல விடுதலைப்புலிகளுடனான யுத்த காலகட்டத்தில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர இந்தியாவுக்கு இருந்த முக்கியத்துவத்தினை நாம் நன்றாக அறிந்து வைத்திருந்தோம். அதன்படி இந்தியாவுடன் நேர்த்தியான திட்டங்களை வகுத்து யுத்தவெற்றியையும் பெற்றோம்.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் நாட்டை அபிவிருத்திபாதையில் கொண்டு சென்றோம். இராணுவ வீரர்களுக்காக பல்வேறு திட்டங்களையும் வகுத்து அவர்களை கௌரவப்படுத்தினோம்.

கடந்தகாலத்தில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து நாட்டை கட்டியெழுப்பிய நிலை தற்போது காணப்படவில்லை. தற்போது நாட்டில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, மக்கள் கடன்சுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதற்கு காரணம் இப்போதைய அரசு நிறுவனங்கள் முறையாக செயற்படாதமையே.

முக்கியமாக நாட்டை அழிவுக்கு பாதைக்கு கொண்டு சென்ற 30 வருடத்திற்கும் மேலாக காணப்பட்ட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் வகையில் சர்வதேசத்திற்கு அடிபணியவைக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக தேர்தல் வாக்குகளை நாம் பயன்படுத்தவேண்டும் என கோட்டாபய மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Recent Comments