த.தே.கூட்டமைப்பு எம்.பிக்களின் படங்களுக்கு மண் அள்ளி வீசி கதறியழுத தாய்மார்கள்

0
134

த.தே.கூட்டமைப்பு எம்.பிக்களின் படங்களுக்கு மண் அள்ளி வீசி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் கதறியழுதுள்ளனர்.

கையளித்தும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 324ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைக்கு முன்பாக கதறியழுதுள்ளனர்.

அத்துடன் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களை காட்டி இவர்கள் துரோகிகள் எனவும் கதறியழுது மண் அள்ளி வீசியிருந்தனர்.

இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பிள்ளைகள் இன்னும் வெளிவராமல் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதியுடனான சந்திப்பின்போது சுமந்திரன் எம்.பி குழப்பத்தை ஏற்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் பல தாய்மார் மயக்கமுற்றும் வீழ்ந்துள்ளதுடன் நாளைய தினம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமது பிள்ளைகள் வருவார்களா என்ற ஏக்கத்தினையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.