மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை

0
134
கொழும்பு நகரின் பயணிகள் போக்குவரத்துக்காக 18 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை 50 மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக 50 கோடி ரூபாவை திறைசேரியிடமிருந்து பெற்றுள்ளது.
இதனை பயன்படுத்தி முதற்கட்டமாக 18 பஸனளை கொள்வனவு செய்யவிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்த்தன எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்;.