8.3 C
New York
Tuesday, July 21, 2020
முகப்பு இலங்கை தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் சகோதர தமிழ் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் சகோதர தமிழ் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

தைப் பொங்கல் பண்டிகையைக்கொண்டாடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத்தெரிவித்துக்  கொள்கிறேன் என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள  தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

                                                        வாழ்த்துச் செய்தி

இலங்கை மக்களது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்லும் இத்தருணத்தில் இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழா்கள் உவகையுடன் கொண்டாடும் இப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, தமிழ் மக்களும், ஏனைய சமூகத்தவா்ககளும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைகின்றது.

உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தைக்கொண்ட தமிழர்கள், உழவுத் தொழிலைப் போற்றி, எருதுகள், கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில், அறுவடைத் திருநாளைத் தைப்பொங்கல் திருவிழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர். இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம்., நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது. தமிழர்கள் இன மத பேதமின்றி அனைத்து மக்களுடனும் ஒன்றினைந்து தைப்பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுதலானது சமாதானம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.

இயற்கையுடன் தொடர்புறும் போது அதன் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும் இன மத பேதங்களைத் தாண்டி சமாதானம் சதோதரத்துவம் மேலோங்கும் மனித சமூகமொன்றை உருவாக்கவும் இம்முறை தைப்பொங்கல் பண்டிகை முன்மாதிரியாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

தைப் பொங்கல் பண்டிகைனயக் கொண்டிடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Recent Comments