9.7 C
New York
Tuesday, March 10, 2020
முகப்பு இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்: உயர்நீதிமன்றம் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்: உயர்நீதிமன்றம் அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு உயர்நீதிமன்றின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2021 வரை ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்? உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்று ஜனாதிபதி செயலகத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆறு வருட காலத்திற்கு ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருந்தது.

இது கடுமையான வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றமானது தனது நிலைப்பாட்டினை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவை நாளைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவை சந்திப்பில் ஜனாதிபதி வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதி தனது இணையத்தளத்தில் பதவிக்காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைக்க ஏற்கனவே இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏழு இடையீட்டு மனுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப் நியமித்துள்ளார்.

பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அளுவிகார, சிசிர.டி.ஆப்ரூ மற்றும் நீதியரசர் கே.ரி.சித்ரசிறி ஆகியோர் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Recent Comments