கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து விலக ஊவா முதலமைச்சர் முடிவு

0
118

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, மாகாண கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து தான் நீங்கப் போவதாக, சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சரான சமார சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாணவி ஒருவரை பாடசாலையில் அனுமதிக்குமாறு, முதலமைச்சர் பணித்திருந்த நிலையில், கல்வி அதிகாரிகளின் ஆணைக்கு மட்டமே தன்னால் கட்டுப்பட முடியும் என கூறிய அந்த அதிபர், சாமர சம்பத்தின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

இந்தநிலையிலேயே, குறித்த அதிபரை முதலமைச்சர் அச்சுறுத்தியதாக தெரியவந்துள்ளது.