தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து நஞ்சருந்தியவர் வைத்தியசாலையில்

0
90

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து, ஒருவர் நஞ்சருந்திய நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலைய வட்டாரங்களை வினவிய போது, அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் கூறிய, பொலிஸ் நிலையத்திதைச் சேர்ந்த காஸ்டபிள், குடும்பத் தகறாறே இதற்குக் காரணமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நபர் பகல் தம்முடன் வந்து உரையாடியதாகவும், திடீரென நஞ்சு அருந்திவிட்டதாகவும், பின்னர் அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்த்திருப்பதாகவும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார்.