மஸ்கெலியாவில் சிவனின் பாத அடையாளம்? ஆய்வில் பொலிஸார்

0
206

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் காட்மோர் பிரதேசத்தில் உள்ள காட்டில் மிகப் பெரிய வலது கால் ஒன்றில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாத மலை காட்டுக்கு அருகில் மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு மேல் உள்ள காட்டில் இருக்கும் கருங்கல்லில் இந்த பாதத்தை கண்ட தோட்டத் தொழிலாளர்கள், அதனை மஞ்சள் இட்டு கழுவி பூஜை செய்துள்ளனர்.

அந்த பாதத்தினை அவர்கள் சிவனின் பாதம் எனவும் தெரிவித்து வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த பாத அடையாளம் சம்பந்தமாக ஆய்வுகளை நடத்த ஆரம்பித்துள்ளதாகவும் டிரோன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.