பெண் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம்: பதுளையில் எதிர்ப்புப் பேரணி

0
94

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று பெற்றோரால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, காலை குறித்த பாடசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, பதுளை நகரை அடைந்தததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன்போது ஆளுநருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, குறித்த விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கை இன்று அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்படும் என, அச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.