முறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்களை சிறையில் அடைக்க வேண்டும் – ஜனாதிபதி

0
112

முறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

கண்டியில் நடைபெற்று வருகின்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சிறையில் அடைக்க வேண்டியவர்களை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அதற்கு பிரதமர் தமக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

நாய்கள் கூட்டத்துடன் முன்னோக்கி செல்வதை விட சிங்கத்திற்கு பின்னால் தலைகுணிந்து செல்வதே மேல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.