யாழ்ப்பாணத்தில் மூதாட்டியொருவர் கொலை

0
83

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் மூதாட்டியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை வீடொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

போத்தலினால் தலைக்கு தாக்கப்பட்டு குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை புத்தளம் ரத்மல்யாய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வீடொன்றுக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

61 வயதான பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தில் இரத்தக்கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.