ஜனாதிபதியை இன்று சந்திக்கும் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0
138

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த அறிக்கை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்திய 34 அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்தல் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.