ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டும்: பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்

0
95

இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டுமென பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வட் டேவி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் தமிழர் அமைப்புடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஐரேப்பிய ஒன்றியத்தினதும், ஐக்கிய நாடுகள் அமைப்பினதும் நிபந்தனைகளை இலங்கை இதுவரையில் நிறைவேற்றத் தவறியுள்ளது.

நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்யும் வரையில் வரிச் சலுகைத் திட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுக்கப்படும்.

பிரிட்டன் நாடாளுமன்றிலும் இது குறித்து கருத்துரைக்கப் உள்ளோம்.

இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகள் உறுதி செய்யப்படவில்லை எனவும் ஸ்திரமான சமாதானம் எட்டப்படவில்லை.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்படும் என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வட் டேவி குறிப்பிட்டுள்ளார்.