அமெரிக்க நெடுவாசல் போராட்டத்திற்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆதரவு

0
91
தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் பகுதியில் மீத்தேன் எடுக்க மத்திய அரசின் முயற்சிக்கு ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்புக்குரல் கொடுத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தை போலவே அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் பசுபிக் கடற்கரையில் பூமிக்கடியில் உள்ள எண்ணெயை தோண்டியெடுக்க அமெரிக்க அரசு செய்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தியுள்ளனர்

இந்த திட்டத்திற்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இவர் கலிபோர்னியாவின் கவர்னராக இருந்தவர் என்பதால் இவரது தலையீட்டிற்கு பின்னர் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த பகுதியில் எண்ணெய் கிணறு தோண்டினால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விடும் என்றும் மேலும் இந்த பகுதி சுற்றுலாப்பயணிகளின் முக்கிய பகுதி என்பதால் இந்த திட்டத்தை அமெரிக்க அரசு கைவிட வேண்டும் என்றும் அர்னால்ட் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்