குற்றம் இழைத்தவர்களை தண்டிப்பதற்கு தான் பொறுப்பு

0
99
மைத்திரிபால சிறிசேன

ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு ஜனாதிபதி என்ற ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் தான் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டது போன்று அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் தனிப்பட்ட ரீதியில் தலையீடு செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புறக்கோட்டை ஐக்கிய வியாபாரிகள் சங்கத்துடன் நடந்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி அறிக்கையின் பக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

விசாரணைக்கு தேவையான ஆவணங்கள்​ தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகள் இயன்றளவு நிறைவடையும் வரை அவை தொடர்பான இரகசியத் தன்மை பேணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.