செல்லுபடியான அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது

0
116

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்கெடுப்பின் போது செல்லுபடியான அடையாள அட்டை இல்லாத எவரையும் வாக்களிக்க அனுமதிப்பதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

அடையாளத்தை வௌிப்படுத்தும் செல்லுபடியான அட்டை இல்லாத வாக்காளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து அடையாள உறுதிப்பத்திரம் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார்.